லாரியில் மோதவிருந்த சிறுவன்! நொடியில் உயிரைக் காப்பாறிய காவலர்! பதற வைக்கும் வீடியோ!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நான்கு முனை சந்திப்பு  உள்ளது. இந்த சந்திப்பு எப்போதும் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க எப்போதும் காவலர் பணியில் இருப்பார்கள்.  இந்நிலையில் நேற்று வழக்கம் போல் நான்கு முனைச் சந்திப்பில் காவலர் ராஜதீபன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் விழுப்புரத்திலிருந்து நெய்வேலி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அச்சமயம் பார்த்து போக்குவரத்துக் காவலரின் பின்புறத்திலிருந்து ஒரு சிறுவன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயற்சி செய்கிறான். லாரி வருவதைக் கண்ட சிறுவன், லாரி செல்வதற்கு முன்பாக செல்வதற்காக சைக்கிளை வேகமாக மிதிக்கத் துவங்குகிறான். இதைக் கண்ட காவலர் கண் இமைக்கும் நேரத்தில் அச்சிறுவனின் சைக்கிளை பிடித்து பின்னால் இழுத்து நிறுத்தி விடுகிறார்.

boy escaped from lorry accident

போக்குவரத்துக் காவலர் சிறுவனைக் காப்பாற்றிய சிசிடிவி காணொலி லாரியில் மோதி விபத்தில் சிக்கியிருக்க வேண்டிய சிறுவனை தக்க சமயத்தில் காவலர் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. காவலரின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது!