லாபத்தை அள்ளிக்கொடுத்த ஸ்பைஸ்ஜெட்…. போன வருஷத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகம்…

 

லாபத்தை அள்ளிக்கொடுத்த ஸ்பைஸ்ஜெட்…. போன வருஷத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகம்…

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.73.2 கோடி ஈட்டியுள்ளது.

விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் லாபமாக ரூ.73.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும். 2018 டிசம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் லாபமாக ரூ.55.1 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

ஸ்பைஸ்ஜெட்

2019 டிசம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய்  47 சதவீதம் அதிகரித்து ரூ.3,647.1 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செயல்பாட்டு வருவாயாக ரூ.2,486.8 கோடி ஈட்டியிருந்தது.

அஜய் சிங்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் கூறுகையில், மேக்ஸ் விமானம் தரையிறக்கப்பட்டதால் எங்களது செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது மற்றும் கூடுதல் செலவினத்துக்கும் காரணமாக அமைந்தது. இதனால் லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், அந்த காலாண்டில் நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மேக்ஸ் விமானம் தரையிறக்கப்பட்டதால் முன்எப்போதும் இல்லாத நெருக்கடி நிலையை எதிர்கொண்ட போதிலும் 2019ம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் 60 சதவீதம் வளர்ச்சி கண்டது. இது நெருக்கடியான நிலையிலும் நிறுவனம் எழுந்து நிற்கும் திறன் உள்ளது என்பதை இது நிரூபணம் செய்துள்ளது என தெரிவித்தார்.