லாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும்…. காங்கிரஸ் முதல்வர் வலியுறுத்தல்

 

லாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும்…. காங்கிரஸ் முதல்வர் வலியுறுத்தல்

மே 3ம் தேதிக்கு பிறகு லாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக நான்காவது முறையாக நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பெரும்பாலான முதல்வர்கள் மே 3ம் தேதிக்கு பிறகும் பொது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலோ தற்போது லாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லாக்டவுன்

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநில முதல்வர்களுடான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் முக்கிய அம்சமே கோவிட்-19 நிலவரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுப்பட்டது. ஆகையால், மே 3ம் தேதிக்கு பிறகு லாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

புதுவை முதல்வர் நரராயணசாமி

மாநில எல்லைகள் அவசியம் சீல் வைக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாநிலத்துக்குள் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடியுடான வீடியோ கான்பரன்சிங் வாயிலான சந்திப்பு குறித்து கூறுகையில், பெரும்பாலான மாநில முதல்வர்கள் லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், அதேசமயம் சிலர் பொருளாதார நடவடிக்கைகளுக்காக சிறிது தளர்வும் கோரினர் என தெரிவித்தார்.