லாக்டவுனை நீட்டிக்க சொல்லும் மாநில அரசுகள்….. சம்மதம் சொல்லும் நிலையில் மத்திய அரசு….

 

லாக்டவுனை நீட்டிக்க சொல்லும் மாநில அரசுகள்….. சம்மதம் சொல்லும் நிலையில் மத்திய அரசு….

மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அமலில் உள்ள லாக்டவுனை மேலும் நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளதால், மத்திய அரசு 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை தொடர்ந்து 2 வாரம் நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவி தற்போது மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி விட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த 25ம் தேதி முதல் நாடு முதல் 3 வாரங்களுக்கு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு அமலில் உள்ளபோதிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இது குறித்து கூறுகையில், பொருளாதாரத்தை பாதிப்பை எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்க முடியும். இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது அதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஊரடங்கு

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஊரடங்கை ஏப்ரல் 14ம் தேதி பிறகு தொடர்ந்து 2 வாரம் நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நேற்ற நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் லாக்டவுன் தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ரயில், மெட்ரோ மற்றும் விமான சேவைகள் விரைவில் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.