லாக்டவுனால் புகுந்த வீட்டுக்கு வர மறுத்த புதுப்பெண்…. போலீசுக்கு போன கணவன்

 

லாக்டவுனால் புகுந்த வீட்டுக்கு வர மறுத்த புதுப்பெண்…. போலீசுக்கு போன கணவன்

உத்தர பிரதேசத்தில் லாக்டவுனை காரணம் காட்டி புகுந்த வீட்டுக்கு புதுப்பெண் வர மறுத்ததால் கணவன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது.

உத்தர பிரதேசம் சம்பல் பகுதியை சேர்ந்த ராஜாவுக்கும் (பெயர் மாற்றம்) அம்ரோஹா பகுதியை சேர்ந்த சுதாவுக்கும் (பெயர் மாற்றம்) கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மத்திய அரசு லாக்டவுனை அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது அம்மாவுக்கு சுதா சென்று இருந்தார். திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சுதாவால் கணவனின் வீட்டுக்கு திரும்பி செல்ல முடியவில்லை.

ஊரடங்கு

இதனையடுத்து ராஜா தனது மனைவியை வீட்டுக்கு வரும்படி வலியுறுத்தினார். ஆனால் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் போலீஸ் தன்னை திரும்பி வர அனுமதிக்கமாட்டார்கள் என சுதா தனது கணவனிடம் தெரிவித்தார். உடனே ராஜா பாஸ் ஏற்பாடு செய்வதாகவும் அதன் மூலம் வீட்டுக்கு வரலாம் என மனைவியிடம் தெரிவித்தார். ஆனாலும், லாக்டவுன் சமயத்தில் பயணம் செய்தால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் என்பதால் அது தனது உடல் நலத்துக்கு ஆபத்தானது என கூறி கணவன் வீட்டுக்கு போக மறுத்து விட்டார்.

உத்தர பிரதேச போலீசார்

இருப்பினும் தனது மனைவியிடம் எடுத்துக்கூறி வீட்டுக்கு அனுப்பும்படி தனது மாமனார் மாமியாரிடம் ராஜா கூறினார். அப்படியும் சுதா தனது மனைவி வீட்டுக்கு வர மறுத்து விட்டார். இதனையடுத்து கோபம் அடைந்த ராஜா நேராக காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியதுடன், உடல் நலக்குறைவாக உள்ள தனது அம்மாவை கவனிக்க வேண்டும் அதனால் தனது மனைவியை வீட்டுக்கு திரும்பி வர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் ராஜாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், லாக்டவுன் முடியும் காத்திருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.