லவ் ஜிகாத்…. பாஜகவிடம் தடாலடியாக சரண்டரான அமைச்சர் செங்கோட்டையன்..!

 

லவ் ஜிகாத்…. பாஜகவிடம் தடாலடியாக சரண்டரான அமைச்சர் செங்கோட்டையன்..!

மத்தியில் ஆளும் பாஜ அரசிற்கு சாமரம் வீசியே பழக்கப்பட்டு விட்ட தமிழக அரசா இப்படி பாஜ கொள்கைக்கு மாறாக நடவடிக்கை எடுக்கும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் நொந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே நடந்து முடிந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் தமிழக பாஜவுக்கும், அதிமுகவுக்கும் அவ்வளவாக நட்புறவு இல்லை. பிரசார களத்திலும் முதல்வர் எடப்பாடி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர்  பாஜவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். தமிழக அரசு பாஜவுக்கு எதிராக களமிறங்க துவங்கி விட்டதோ என்று பலரும் நினைத்திருந்த நிலையில் தடாலடியாக சரணடைந்தார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

senkottaiyan

பாஜக ஆதரவுடன் ஒவ்வொரு  பள்ளி, கல்லூரியிலும் ‘லவ் ஜிகாத்தை’ தடுப்பதற்காக இந்து மாணவிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட எச்ஒய்எப் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மோதலை உருவாக்கும் என்பதால் இந்த அமைப்பை தடுக்க தமிழக பள்ளிக் கல்விதுறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் திடீரென பின் வாங்கி விட்டார்.

love jihadh

பள்ளிக் கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்புகள் வெளியிட்டாலும் முதல்வர் ஒப்புதல் பெற்றே வெளியிடப்படும் என்றும், மத ரீதியாக செயல்படும் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை  என்றும் தடாலடியாக மறுத்தார்.sengottaiyan

அதானே மத்தியில் ஆளும் பாஜ அரசிற்கு சாமரம் வீசியே பழக்கப்பட்டு விட்ட தமிழக அரசா இப்படி பாஜ கொள்கைக்கு மாறாக நடவடிக்கை எடுக்கும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் நொந்து கொள்கின்றனர்.