லண்டனை கதிகலங்க வைக்கப்போகும் தீபா… மனைவியை நினைத்து மாதவன் ஆனந்தக் கண்ணீர்..!

லண்டனை கதிகலங்க வைக்கப்போகும் தீபா… மனைவியை நினைத்து மாதவன் ஆனந்தக் கண்ணீர்..!

தமிழக அரசியலில் பொதுவாக தொண்டர்களே தலைவர் அல்லது தலைவியை பார்த்து கதறுவது வழக்கம். ஆனால், தொண்டர்களைப் பார்த்து கதறிய ஒரே தலைவி, சரித்திரத்தில் தீபா மட்டுமே.

லண்டனை கதிகலங்க வைக்கப்போகும் தீபா… மனைவியை நினைத்து மாதவன் ஆனந்தக் கண்ணீர்..!

’போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க. அப்படியே என்னையும் புள்ள குட்டி பெத்து நிம்மதியா வாழவிடுங்க’ என்று தன் தொண்டர்களிடம் கெஞ்சியும், ‘போலீஸ்கிட்டே சொல்லிடுவேன்’ என்று மிரட்டியும் தன் அரசியல் அத்தியாத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.

தமிழக அரசியலில் பொதுவாக தொண்டர்களே தலைவர் அல்லது தலைவியை பார்த்து கதறுவது வழக்கம். ஆனால், தொண்டர்களைப் பார்த்து கதறிய ஒரே தலைவி, சரித்திரத்தில் தீபா மட்டுமே.

’போய் புள்ள குட்டிகளை படிக்க வையுங்க. அப்படியே என்னையும் புள்ள குட்டி பெத்து நிம்மதியா வாழவிடுங்க’ என்று தன் தொண்டர்களிடம் கெஞ்சியும், ‘போலீஸ்கிட்டே சொல்லிடுவேன்’ என்று மிரட்டியும் தன் அரசியல் அத்தியாத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.

தீபாவின் இந்த முடிவால் அகமகிழ்ந்து கிடக்கிறார் அவரது காதல் கணவர் மாதவன். அதிமுகவின் கோடி தொண்டர்களும், தமிழகத்தின் கோடான கோடி மக்களும், தனக்காக காத்திருக்கும் நிலையிலும் இப்படியொரு தடாலடி முடிவை தான் எடுத்து பற்றி தன் கணவரிடம் தீபா கேட்டதும், மனம் நெகிழ்ந்து போன மாதவன் ‘நீ சொல்லிட்ட… நானும் சொல்லிடுறேன்..’ கண்ணீர் விட்டிருக்கிறார்.

அதாவது ’எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ எனும் தனது அரசியல் அமைப்பை இழுத்து மூடிவிட்டதை தீபா அறிவித்துவிட்டார் வெளிப்படையாக. ஆனால், மாதவனோ தீபாவுக்கு போட்டியாக ஒரு கட்சி தொடங்கி இருந்தார். அதை தானும் மூடிவிடுவதாக அறிவிக்காததை தான் அப்படி சொல்லி இருக்கிறார்.

ஆக தன் கணவரும், கடினமான அரசியல் போர்க்களத்திலிருந்து விலகுவதில் தீபாவுக்கு பெரும் மகிழ்ச்சியாம், அடுத்து என்ன எனப்து குறித்தும் அவர்கள் திட்டமிட்டு விட்டனர். சென்னையிலேயோ, இந்தியாவில் வேற எங்கேயும் இருந்தால் நிச்சயம் தொண்டர்களும், நிர்வாகிகளும் என்னை தேடி வந்து அரசியலை வழி நடத்த சொல்லுவாங்க. அதனால நாம வெளி நாடு போயி செட்டிலாகிடலாம்.’ என்று தன் கணவரிடம் அவர் கூற, மாதவனும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

சீட்டு குலுக்கிப் போட்டுப் பார்த்ததில் ‘லண்டன்’ என்று வந்துவிட, ‘அத்தை ஜெயலலிதாவே இதை சூஸ் பண்ணி கொடுத்திருக்காங்க. லெட்ஸ் கோ லண்டன்’ என்று முடிவெடுத்துவிட்டனர் தீபா தம்பதி. அங்கே தனி வீடு, தனி வேலை, தனி கார் எல்லாமே ரெடி பண்ணி வைக்க ஆர்டரும் கொடுத்து விட்டார்களாம். விரைவில் ஃபிளைட்டை பிடிக்க வேண்டியதுதான் பாக்கி. ஆக இனி இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. அதே நேரத்தில் தீபா இப்படி ஒரேடியாக தங்களை பரிதவிக்க விட்டுச் செல்வதை கண்டு அப்பேரவையின் பல லட்சம் தொண்டகள்தான் கண்ணீரும் கம்பலையுமாக அலைகிறார்கள். மரமே கிளம்பியபின் நிழலுக்கு என்ன வேலை..!