லண்டனில் அமையவுள்ள உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்! இனி எல்லாமே அப்பட்டமாக தெரியும்!!

 

லண்டனில் அமையவுள்ள உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்! இனி எல்லாமே அப்பட்டமாக தெரியும்!!

லண்டனில் அமையவுள்ள உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

லண்டனில் அமையவுள்ள உலகிலேயே முதல் 360 டிகிரி நீச்சல் குளம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

லண்டனில் உள்ள புகழ்பெற்ற இன்ஃபினிட்டி கட்டடத்தில் மொத்தம் 55 மாடிகள் உள்ளன. அந்தக் கட்டடத்தின் மொட்டைமாடியில், 360 டிகிரி கொண்ட உலகின் முதல் நீச்சல் குளத்தை கட்ட முடிவெடுத்து, அதற்கான மாதிரி புகைப்படங்களை அந்நாட்டு பொறியாளர் அலெக்ஸ் கெல்லி என்பவர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதன் 4 சுவர்களுமே கண்ணாடியால் ஆனவை.  

Pool

அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே இந்த நீச்சல் குளத்தில் குளிக்கலாம். கட்டடத்திலிருந்து சுழலும் படிக்கட்டுக்கள் நீச்சல் குளத்திற்கு மனிதர்களை தூக்கி செல்லும் வகையில் நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பொத்தானை அழுத்தினால் அந்தப் படிக்கட்டு வந்து அழைத்துச் செல்லும் என்றும் கூறியுள்ளார். தண்ணீருக்கு அடியில் ஒளிவிளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் இங்கு கூடும் மக்கள் உல்லாசமாக இருப்பர் என அலெக்ஸ் தெரித்துள்ளார். 

Pool 1

நீச்சல் குளத்தின் அடிப்பகுதியும் கண்ணாடியால் ஆனது. அதனால் இன்ஃபினிட்டி கட்டடத்திற்குள் நுழைபவர்கள் அன்னாந்து பார்த்தால் நீச்சல் குளத்தில் குளிப்பவர்களை அப்பட்டமாக பார்க்கலாம். அதேபோன்று நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டே கீழே கட்டடத்தில் நின்று கொண்டவர்களை பார்க்கலாம். இந்த நீச்சல் குளம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.