லட்டுக்கு இனிமே திருப்பதி மட்டும் இல்ல; நாளையிலிருந்து நம்ம மதுரையும் தான்!

 

லட்டுக்கு இனிமே திருப்பதி மட்டும் இல்ல; நாளையிலிருந்து நம்ம மதுரையும் தான்!

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

மதுரை மீனாட்சி கோயிலில் நாளை முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. 

மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

temple

இதையடுத்து சமீபத்தில் இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு  வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது. 30 கிராம் எடையுள்ள லட்டை பக்தர்கள்  முக்குறுணி விநாயகர் சன்னிதி அருகே பெற்றுக்கொள்ளலாம்.

laddu

இந்நிலையில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை காணொலிக் காட்சி மூலம் துவக்கி  வைக்கிறார்.  இந்த லட்டானது காலையில் கோயில் திறக்கப்படுவதிலிருந்து  இரவு மூடப்படும் வரை  இந்த பிரசாதமானது கோயிலுக்கு  வரும் பக்தர்களுக்குக் கிடைக்கும்.