லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை: சென்னையில் 6.30 லட்சம் பறிமுதல்..!

 

லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை: சென்னையில்  6.30 லட்சம் பறிமுதல்..!

கடந்த சில நாட்களாக லஞ்சம் வாங்குவது அதிகரித்துக் கொண்டே வருவதால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக லஞ்சம் வாங்குவது அதிகரித்துக் கொண்டே வருவதால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் நடைபெற்ற சோதனையில் 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனையின்போது 30 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Raid

அதனை தொடர்ந்து, இன்று சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வீட்டு பத்திரம் பதிவு செய்வதற்காக 40 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்ததன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை சைதாப்பேட்டை சார் அலுவலகத்திலும் நடைபெற்ற சோதனையில் 66 ஆயிரம் ரூபாயும் கொரட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று லட்சத்து 42 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.