லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை… ஒரே நாளில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..!

 

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை… ஒரே நாளில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..!

ஒரே நாளில் 6 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தது அரசு அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வழக்கமாகி விட்டது. ஏதேனும் வேலை உடனே ஆக வேண்டும் என்றால் அரசு அலுவலர்களுக்கு பணம் கொடுத்தால் உடனே அது நிறைவேற்றப்படும் என்ற கருத்து மக்கள் மனதில் பதிந்தே விட்டது. ஒரே நாளில் 6 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தது அரசு அலுவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Raid

சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலையில் இருக்கும் தனி தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தார் ஸ்ரீதர் அங்குச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் பட்டா வாங்கி தருவதற்கு, ஒரு பட்டாக்கு 30 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததன் பேரில், ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், தாசில்தார் ஸ்ரீதர் காரில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. மேலும், இரண்டு லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. இதனால், தாசில்தார் கைது செய்யப் படுவார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Money

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் கொரட்டூர் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 3 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மக்களிடம் டெண்டர் எடுப்பதற்காக லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.