ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்! கோ சாலையில் ஒப்படைத்த அதிகாரிகள்!

ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்! கோ சாலையில் ஒப்படைத்த அதிகாரிகள்!

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில்  மாடுகள் அதிக அளவில் சாலையில் பொதுமக்களுக்கும், இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் இருந்து தொடர்ந்து எழுந்த புகார்களின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

cows

இன்று திருநெல்வேலி மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் அவர்களின் மேற்பார்வையில்  மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் நடு ரோட்டில் அலைந்து திரிந்த மாடுகளைப் பிடித்தனர். திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் சுகாதார அலுவலர் அரசகுமார் அவர்கள் தலைமையில்  சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன்,  கருப்பசாமி ஆகியோர்,  ஈரடுக்கு மேம்பாலம் அருகில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அலைந்த மாடுகளைப் பிடித்து கோ சாலையில் ஒப்படைத்தனர். மாடுகளை சாலையில் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.