ரொம்ப படுத்தாதீங்கப்பா விஜய் ரசிகர்களை எச்சரித்த பாடலாசிரியர்!?

 

ரொம்ப படுத்தாதீங்கப்பா விஜய் ரசிகர்களை எச்சரித்த பாடலாசிரியர்!?

பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் கணக்கை குளோஸ் செய்ய முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

சென்னை: பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் கணக்கை குளோஸ் செய்ய முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இளையதளபதி விஜயின் மனம் கவர்ந்த பாடலாசிரியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாடலாசிரியர் விவேக்.மெர்சல் படத்தில் வந்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை எழுதியவர் இவர்தான்.அந்தப் பாடல் விஜயின் ரசிகர்கள் தாண்டி உலகம் முழுக்க ரீச் ஆனதில் ‘ண்ணா ஹேப்பி’.

 தனது அரசியல் மூவுக்கும் மூடுக்கும் ஏத்த மாதிரி விவேக்கின் சிந்தனைகளும் ஒத்துப் போனதால் அடுத்த படமான ‘சர்க்கார்’படத்தில் மொத்தப் பாடல்களையும் எழுத வச்சு அழகு பார்த்தார் இளைய தளபதி.

 

vijay

தற்போது ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய்,அட்லீ,ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ள ‘விஜய்-63’ படத்திற்கும் அவர்தான் பாடல் எழுதப் போகிறார் என்று அறிவிப்பு வந்த நாளில் இருந்த விஜயின் ரசிகர்கள் பாடலாசிரியர் விவேக்கின்  டிவிட்டர் கணக்கை மானாவாரியாக பின் தொடர ஆரம்பித்தார்கள்.

விவேக்கும் உற்சாகமாகி வரட்டும் வரட்டும்,அதிக ஃபாலோயர்கள் உள்ள ஒரே பாடலாசிரியர்னு டிக்ளர் பண்ணிரலாம்னு முடிவு பண்ணியிருந்த நேரத்தில்தான் அவரது எண்ணத்தில் மண்ணள்ளிப் போடும் வேலையை செய்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! 

மார்ச் முடிந்து ஏப்ரல் 16 ஆம் தேதி விவேக்கின் பிறந்தநாள் வருகிறது.அதற்கு இப்போதே #50DaysToGoForLyricistVivekAnnaBday என்ற ஹேஸ் டேக்கைப் போட்டு ட்ரெண்டடிக்க வைக்கிறதா நினைச்சுக்கிட்டு விஜய் ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு ஸ்டேட்டஸை போட்டு விவேக்கின் டிவிட்டர் கணக்கில் டேக் பண்ணிவிடுகிறார்களாம்.

எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்று நொந்து போன விவேக்,தனது டிவிட்டரில் விஜய் ரசிகர்களுக்கு ‘உங்களுடைய பொன்னான நேரத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீங்க! யாருக்குமே இப்படியெல்லாம் டேக்  பண்ணி டயத்தை வேஸ்ட் பண்ண மாட்டாங்க என்று விஜய் ரசிகர்களிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள் மறுபடியும் ‘டேக்’ பண்ணினால் ட்வீட்டர் கணக்கையே குளோஸ் பண்ணும் முடிவில் இருக்கிறார் விவேக்.ஏம்பா இளையதளபதி ஃபேன்ஸ்.உங்க தலைவரை,’ஆளப் போறான் தமிழன்னு’ சொன்னது ஒரு குத்தமா!