ரொம்ப எதிர்பார்க்காதீங்க…. ஏமாந்து போவீங்க… பட்ஜெட் குறித்து நிபுணர்கள்….

 

ரொம்ப எதிர்பார்க்காதீங்க…. ஏமாந்து போவீங்க… பட்ஜெட் குறித்து நிபுணர்கள்….

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு உள்பட பல்வேறு சலுகைள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என நினைக்காதீங்க அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் என பல ஜனரஞ்சகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டை  தாக்கல் செய்த பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தனது பட்ஜெட் உரையின் போது, இன்னும் 100 செயல்களை செய்ய நினைத்தோம் ஆனால் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் முடியவில்லை என்று பெரிய எதிர்பார்ப்பை கொளுத்தி போட்டார்.

நிர்மலா சீதாராமன்

அதன் பிறகு, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் இடைக்கால பட்ஜெட் வெறும் டிரைலர் என்று கூறினார். இதனால் புதிய அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்  என நடுத்தர வருவாய் பிரிவினர் எதிர்பார்க்க தொடங்கினர். ஆனால் பட்ஜெட்டில் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போகாதீங்க என நிபுணர்கள் கூறுகின்றனர். 

வரி

நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று 15 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்களை கேட்டது. 15ல் 5 பொருளாதார நிபுணர்கள் மட்டுமே பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் இந்த பட்ஜெட்டில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரிய வரி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் தற்போதைய பொருளாதார நிலை இது போன்ற சலுகைகளை கொடுக்க இடம் கொடுக்காது என தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.