ரொட்டிக்கு அருமையான அப்பளக் கூட்டு

 

ரொட்டிக்கு அருமையான அப்பளக் கூட்டு

நாண், ரொட்டி, புரோட்டா, சாதம், புல்காவுடன் சாப்பிட அப்பளக் கூட்டு சூப்பராக இருக்கும். இந்த அப்பளக் கூட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

நாண், ரொட்டி, புரோட்டா, சாதம், புல்காவுடன் சாப்பிட அப்பளக் கூட்டு சூப்பராக இருக்கும். இந்த அப்பளக் கூட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

அப்பளம் – 12
வெங்காயம் – 3
கெட்டித் தயிர் – அரை கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன் 
பூண்டு பல் – 6
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, கொத்தமல்லித்தழை – தேவைக்கேற்ப.

செய்முறை:

கொத்தமல்லி, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மசாலா அப்பளத்தை சுட்டோ, பொரித்தோ, மைக்ரோவேவ் அவனில் வாட்டியோ வைக்கவும்.

1/2 கப் தண்ணீரில் தனியாத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயம், பொடித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள மிளகாய் தூள் கலவையை சேர்த்து வதக்கவும். 

மசாலாக்கள் வதங்கி எண்ணெய் மேல் வந்ததும் தயிரை அடித்து கலவையில் சேர்த்து திரியாமல் கலக்கவும். 

ஒரு கொதி வந்ததும், அப்பளத்தை உடைத்து சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

அருமையான அப்பளக் கூட்டு ரெடி. நாண், ரொட்டி, புரோட்டா, சாதம், புல்காவுடன் சாப்பிட அப்பளக் கூட்டு செம ஜோராக இருக்கும்.