ரைசாவின் முத்த வீடியோ: வைரலாகும் ரசிகர்கள்!

 

ரைசாவின் முத்த வீடியோ: வைரலாகும் ரசிகர்கள்!

நடிகை ரைசா முத்தம் கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை ரைசா முத்தம் கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

raiza

அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரைசா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. மேலும் அதில் ‘Do NOT kiss me, I mean it ‘ என்றும் பதிவு செய்துள்ளார். ரைசா முத்தம் கொடுக்க கொடுக்க அந்த நாய்க்குட்டி திரும்பிக்கொள்ளும்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.