ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 ரூபாய் பொருட்கள்! என்னென்ன பொருட்கள் தெரியுமா?

 

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 ரூபாய் பொருட்கள்! என்னென்ன பொருட்கள் தெரியுமா?

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1000 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை போன்றவை நிவாரணமாக வழங்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு  19 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பை கடந்த இரண்டு நாட்களாக வழங்கிவருகிறது. 

ration shop

இந்நிலையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பை ரேசன் கார்டு இல்லையென்றாலும் வழங்க வேண்டும் என  வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரேசன் கார்டு இல்லையென்றாலும் 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.  ரேசன் கார்டோ, மற்ற எந்த ஒரு அடையாள விவரங்களோ கேட்கப்படமாட்டாது என்றும் விளக்கமளித்துள்ளதையடுத்து சூரிய பிரகாசம் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

என்னென்ன பொருட்கள் உள்ளன?

மளிகை பொருட்கள்

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம், தோசை புளி, பொட்டுக்கடலை, நீட்டு மிளகாய், தனியா, மஞ்சத்தூள், டீதூள், உப்பு, பூண்டு, கோல்டு வின்னர் சன் பிளவர் ஆயில், பட்டை, சோம்பு, மிளகாய் தூள் ஆகிய 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.