ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.500 ப்ளஸ் பொங்கல் தொகுப்பு பரிசு !

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.500 ப்ளஸ் பொங்கல் தொகுப்பு பரிசு !

தமிழகத்தில்,  ரேஷன் கடைகளில், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு (2019) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை, கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ரொக்கம், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 2,250 கோடி ரூபாய் செலவழித்தது. 

ration store

சமீபத்தில் நடைப்பெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுக., வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான பணிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்புக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. 
எனவே, 2020 பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தொகுப்பு பொருட்களுடன் 500 ரூபாய் பணமும் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த தொகுப்புப் பொருட்களும், ரொக்க பணமும் முன்கூட்டியே தயாராக வைக்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி கூறினார்.