ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு !

 

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு !

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டின் கால அவகாசம் வரும் 29 ஆம் தேதியோடு நிறைவடைவதால், அதனை நீடிக்குமாறு  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்  கோரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டம் நீட்டிக்கப் பட்டால் வெளிச் சந்தைகளின் விலை கட்டுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ttn

அதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரது கோரிக்கையைப் பரிசீலித்துள்ளது. அதன் படி, இன்னும் ஒரு ஆண்டுக்கு அதாவது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை  கனடா மஞ்சள் லெண்டில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் தயானந்த கட்டாரியா தெரிவித்துள்ளார்.