ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்.. அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை !

 

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்.. அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை !

நேற்று திருப்பூர், வாணியம்பாடி பகுதியில் சுமார் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டது. 

ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசிகள் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத அரிசியை, ரேஷன் கடை ஊழியர்கள் பணத்திற்கு வெளியே விற்று விடுவதாகப் பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நேற்று திருப்பூர், வாணியம்பாடி பகுதியில் சுமார் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டது. 

ttn

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அமைச்சர் காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் சேர்வதற்காக வந்த 100 பேர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துவது மிகப் பெரிய குற்றம் என்றும் அத்தகைய கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.