ரேவதி அக்கா ஓட்டல்’… ரியலான வீட்டுச் சாப்பாடு..!

 

ரேவதி அக்கா ஓட்டல்’… ரியலான வீட்டுச் சாப்பாடு..!

வெளியே பெயர் பலகையெல்லாம் கிடையாது. மதியம் 12 மணியில் இருந்தே பல பேர் இந்தத் தெருவில் இருக்கும் ஒரு சந்துக்குக்குள் நுழைந்து போவதைப் பார்க்கலாம்,அவர்களைப் பின்தொடர்ந்து இரண்டுமாடி படியேறிச் சென்றால் உணவகம் வருகிறது .

வீட்டுச் சாப்பாடு,வீட்டு ருசி என்றெல்லாம் பல பெயர்பலகைகளை பார்த்து இருக்கிறோம்.இந்த ரேவதி அக்கா தன் வீட்டிலேயே சாப்பாடு போடுகிறார்.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் கலந்தர் மதீனா டெக்ஸ்டைல்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது. அதன் எதிரில் போகும் தெருவின் பெயர் வேலாயுத பாண்டியன் தெரு.அந்தத் தெருவில் இருக்கிறது இந்த வித்தியாசமான உணவகம்.

food

வெளியே பெயர் பலகையெல்லாம் கிடையாது. மதியம் 12 மணியில் இருந்தே பல பேர் இந்தத் தெருவில் இருக்கும் ஒரு சந்துக்குக்குள் நுழைந்து போவதைப் பார்க்கலாம்,அவர்களைப் பின்தொடர்ந்து இரண்டுமாடி படியேறிச் சென்றால் உணவகம் வருகிறது .

ஏழெட்டுப் பெண்கள் மட்டுமே ஊழியர்கள். இரண்டு டேபிள்கள் போடப்பட்டு இருக்கிறது.எட்டுப்பேர் சாப்பிடலாம். இடம் கிடைக்காதவர்கள் தட்டில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே வசதிப்பட்ட இடத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

foods.jpg1.jpg3

மீனுடன்  முழுச்சாப்பாடு 60 ரூபாய்.பொரித்த மீன் 30 ரூபாய் முதல் அதன் சைசை பொறுத்தும் அன்றைய மார்கெட் நிலவரத்திற்கு ஏற்பவும் விலையில் மாறுபாடு இருக்கும்.மதியம் ஒரு வேளை மட்டுமே உணவகம் திறந்திருக்கும். அதிலும் ஞாயிறு விடுமுறை!.சாப்பாடு தவிற ஆரம்பத்தில் சிக்கனும் எறாவும் மட்டுமே செய்து இருக்கிறார்கள். இப்போது கடம்பா,தலைக்கறி, போட்டி,ஈரல்,நண்டு என்று வெரைட்டிகள் பெருகிவிட்டன.

வெறும் மீன் சாப்பாடு என்றால் தட்டில் இலை போட்டு தாராளமாக சோறுபோட்டு அதன் நடுவில் துண்டுடன்  மீன்குழம்பு ஊற்றி கொடுக்கிறார்கள். கூடவே ஒரு பொரித்த மீன் துண்டு,கூட்டு அப்பளம் உண்டு.கடைசியில் ரசம் தரப்படுகிறது.உங்களுக்கு அங்கே தயாராகும் எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. ரேவதி அக்கா கடையில் தயாராகும் அத்தனை அயிட்டங்களுடன் சாப்பாட்டுக்கு 200 ரூபாய் வாங்குகிறார்கள்.

foods.jpg2

இந்தப் பகுதி நிறைய வியாபார நிறுவனங்கள் நிறைந்தது என்பதால் சாப்பிடப்படும் சாப்பாடுகளை விட பார்சல் சாப்பாடுகள் அதிகம் பறக்கின்றன. சென்னை ரங்கநாதன் தெருவைப் போலவே எம்சி ரோடும் மலிவு விலை துணிக்கடைகள் நிறைந்தது என்பதால் தீபாவளி,பொங்கல் சமையத்தில் மட்டும் ரேவதி அக்கா உணவகத்துக்கு  போவதை தவிருங்கள்.உள்ளே கால் வைக்கக்கூட இடம் கிடைக்காது.