ரேசர் போன் 2 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

ரேசர் போன் 2 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரேசர் நிறுவனம் தனது ரேசர் போன் 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

டெல்லி: ரேசர் நிறுவனம் தனது ரேசர் போன் 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

முதல் தலைமுறை ரேசர் போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ரேசர் போன் 2 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 10-ம் தேதி ரேசர் போன் 2 அறிமுகம் செய்யப்படுகிறது.

இதற்கான அழைப்பினை ரேசர் வெளியிட்டுள்ளது. முன்னதாக ரேசர் போன் 2 விவரங்கள் சீனாவின் AnTuTu வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. அப்போது ரேசர் போன் 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தொடர்பாக அதில் வெளியானது.

சீனாவின் பென்ச் மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆன விவரங்களின் அடிப்படையில் ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் ஆகிய வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. இது ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.