ரெமோ கெட்டப்பில் மகளுடன் அசத்திய சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படம்!

 

ரெமோ கெட்டப்பில் மகளுடன் அசத்திய சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படம்!

ரெமோ படத்தின் 2 ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்னை: ரெமோ படத்தின் 2 ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இயக்குநர்  பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டுவெளியான திரைப்படம் ரெம.  இந்தப் படத்திற்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. 

இந்நிலையில் இதனைக் கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் ரெமோ கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் #AaradhanaSK என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது. 

முன்னதாக கனா படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.