ரெட் அலர்ட் எச்சரிக்கை: கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல் 

ரெட் அலர்ட் எச்சரிக்கை: கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல் 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

tourist spot

தமிழகத்தில் பருவ மழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து கனமழை பெய்துவருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த  இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடைக்கானலில் நாளையும், அதற்கு மறுநாளும் அதாவது 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.