‘ரூ.998-க்கு 7 மாதம்…2ஜிபி டேட்டா’: அசத்தும் பிரபல நெட்வொர்க் நிறுவனம்!

 

‘ரூ.998-க்கு 7 மாதம்…2ஜிபி டேட்டா’:  அசத்தும் பிரபல  நெட்வொர்க் நிறுவனம்!

ரூ.997-க்கு  ரீசார்ஜ் செய்து  தினமும் 3GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என 180 நாட்களுக்கு  வழங்கி வந்தது

ஜியோவின் வருகை பல நெட்வொர்க்குகளை சரிவில் தள்ளியுள்ளது. இதில் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அடங்கும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

phone

இதனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல்  ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.998-க்கு ரீசார்ஜ் செய்து  தினமும் 2GB டேட்டாவை 210 நாட்களுக்கு பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆஃபரில்  அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற எந்தவித சலுகைகளும் அடங்காது. 

bsnl

முன்னதாக  ரூ.997-க்கு  ரீசார்ஜ் செய்து  தினமும் 3GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என 180 நாட்களுக்கு  வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.