ரூ.71 ஆயிரம் கோடிக்கு வங்கி மோசடி…. அதிகம் ஏமாந்தது அரசு வங்கிகள்தான்….

 

ரூ.71 ஆயிரம் கோடிக்கு வங்கி மோசடி…. அதிகம் ஏமாந்தது அரசு வங்கிகள்தான்….

கடந்த 2018-19ம் நிதியாண்டில் மட்டும் ஒட்டு மொத்த அளவில் ரூ.71 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி மோசடி நடைபெற்றுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பொதுத்துறை வங்கிகள் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

வங்கிகள் என்னதான் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வோடு இருந்தாலும் ஏமாற்று பேர்வழிகள் அவற்றை ஏமாற்றி பணத்தை ஆட்டை போட்டு விடுகின்றனர். போலியான ஆவணங்களை கொடுத்து கடன் வாங்கின்றனர். தொழில்நுட்ப திறமை கொண்ட திருட்டு கும்பல்கள் ஆன்லைன் வாயிலாக மற்றவர்களின் பணத்தை திருட்டுதனமாக எடுத்து விடுகின்றனர் இது போன்ற மோசடி தொடர்பான புகார்களை வங்கிகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பதிவு செய்து வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி 2018-19ம் நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியே வந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் வங்கி துறை 6,801 மோசடி புகார்கள் கொடுத்துள்ளது. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.71,542 கோடியாகும். 

2017-18ம் நிதியாண்டில் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்புக்கு வங்கிகளில் மோசடி நடந்ததாக 5,916 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதாவது கடந்த ஆண்டில் வங்கி மோசடி வழக்குகள் எண்ணிக்கை 15 சதவீதமும், மோசடியின் மதிப்பு 73 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஏ.டி.எம். மோசடி

வங்கி மோசடிகள் நடைபெற்று இருப்பது பொதுத்துறை வங்கிகளில்தான். அதற்கு அடுத்ததாக தனியார் வங்கிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் கடந்த ஆண்டில் ரூ.68 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக 2,885 வழக்குகள் பதிவாகி இருந்தன.