ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்தது….

ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்த பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்தது….

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்தது.

சீனாவில் ஆயிரம் பேருக்கு மேல் காவு வாங்கிய கொரோனாவைரஸின் மோசமான காலகட்டம் கடந்து விட்டதாக பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர். இதனால் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

k

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் இந்துஸ்தான் யூனிலீவர், கோடக்மகிந்திரர வங்கி, நெஸ்லே இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஸ்டேட் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, சன்பார்மா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

sun

மும்பை பங்குச் சந்தையில்  இன்று 1,008 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.1,506 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.67 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ. 70 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

s

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்  சென்செக்ஸ் 349.76 புள்ளிகள் உயர்ந்து 41,565.90 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.30 புள்ளிகள் உயர்ந்து 12,201.20 புள்ளிகளில் நிலைகொண்டது.