ரூ.594 மற்றும் ரூ.297 ஆகிய இரண்டு புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ

 

ரூ.594 மற்றும் ரூ.297 ஆகிய இரண்டு புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.594 மற்றும் ரூ.297 ஆகிய இரண்டு புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.594 மற்றும் ரூ.297 ஆகிய இரண்டு புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிது புதிதாக பிரீபெயிட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.594 மற்றும் ரூ.297 ஆகிய இரண்டு புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளான்களுக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஜியோ போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இவ்விரு பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ரூ.594 ரீசார்ஜ் பிளானில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினமும் 500 எம்.பி அதிவேக டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ ஆப்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி ஆகிய வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

ரூ.297 ரீசார்ஜ் பிளானில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினமும் 500 எம்.பி அதிவேக டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ ஆப்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி ஆகியவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.