ரூ.525 கோடி லாபம் பார்த்த மேகி நூடுல்ஸ் நிறுவனம்…. பணியாளர்களுக்கு சம்பளத்தை முழுசா கொடுத்த நெஸ்லே இந்தியா

 

ரூ.525 கோடி லாபம் பார்த்த மேகி நூடுல்ஸ் நிறுவனம்…. பணியாளர்களுக்கு சம்பளத்தை முழுசா கொடுத்த நெஸ்லே இந்தியா

பிரபல மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.525 கோடி ஈட்டியுள்ளது.

கிட்கேட் சாக்லேட், மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நெஸ்லே இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.525.43 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே  மாதத்தை காட்டிலும் 13.5 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.462.74 கோடி மட்டும் ஈட்டியிருந்தது.

நெஸ்லே இந்தியா

2020 மார்ச் காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு வாயிலான வருவாய் 10.73 சதவீதம் அதிகரித்து ரூ.3,325.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதே காலாண்டில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 10.7 சதவீதமும், ஏற்றுமதி விற்பனை 12.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மூலப்பொருட்கள் செலவினம் 22.76 சதவீதம் அதிகரித்து ரூ.1,483.78 கோடியாக உயர்ந்துள்ளது.

நெஸ்லே இந்தியா தயாரிப்புகள்

நெஸ்லே இந்தியா நிறுவனம் பணியாளர் அல்லது சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக நெஸ்லே நிறுவனம் கூறுகையில், சம்மர் இன்டர்ஷிபிற்கான ஒவ்வொரு உறுதிப்பாடும கவுரவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இளம் நிர்வாக பயிற்சியாளர்களும் சரியான நேரத்தில் சேர்வார்கள். ஒவ்வொரு புதிய பணியாளர் ஒப்பந்தமம் மதிக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு ஊழியரும் தங்களது முழு சம்பளம், போனஸ் மற்றும் பிற சலுகைகளை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.