ரூ.449 விலையில் 140 ஜிபி டேட்டா…சலுகையை வாரி வழங்கும் ஏர்டெல்

 

ரூ.449 விலையில் 140 ஜிபி டேட்டா…சலுகையை வாரி வழங்கும் ஏர்டெல்

மும்பை: ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகை பயனர்களுக்கு 140 ஜிபி டேட்டா வழங்குகிறது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கி வருவதாக அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரூ.449 விலையில் பிரீபெயிட் பயனர்களுக்கான புதிய சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது.

அதாவது 70 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 140 ஜிபி டேட்டாவை அந்த ரீசார்ஜ் பிளானில் ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.448 விலையில் வழங்கும் சலுகையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் 168 ஜிபி டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.