ரூ.33 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தில் தங்க விலை.. வரலாறு காணாத விலை உயர்வு!

 

ரூ.33 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தில் தங்க விலை.. வரலாறு காணாத விலை உயர்வு!

இன்று காலை தங்க விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து புது உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தங்க விலை உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்துள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று காலை தங்க விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து புது உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தங்க விலை உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்துள்ளது. 

ttn

இன்றைய மாலை நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.94 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,166க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,328க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே தங்க விலை ரூ.2,000க்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.53.30க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.900 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.53,300க்கு விற்கப்படுகிறது.