ரூ.24.7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து! – கொண்டாட்டத்தில் தெலங்கானா… பெருமூச்சு விடும் தமிழகம்

 

ரூ.24.7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து! – கொண்டாட்டத்தில் தெலங்கானா… பெருமூச்சு விடும் தமிழகம்

தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசையின் உரையோடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “விவசாயிகளுக்கு நான்கு தவணையாக கடன் தள்ளுபடி தொகை வழங்கப்படும்” என்றார்.

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலங்கானாவில் ரூ.24 ஆயிரத்து 738 கோடி விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் ரத்து

தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசையின் உரையோடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில், “விவசாயிகளுக்கு நான்கு தவணையாக கடன் தள்ளுபடி தொகை வழங்கப்படும்” என்றார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் நிலுவை வைத்துள்ள 5.83 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக தெலங்கான அரசு ரூ.1198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

andhra-farmers

வங்கிகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட மாட்டாது. எம்.எல்.ஏ-க்கள் மூலமாக விவசாயிகளுக்கு அவர்கள் கடன் நிலுவைத் தொகை செக்காக வழங்கப்படும். அதை அவர்கள் வங்கியில் செலுத்தி கடனை அடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோத்தம் 24.738 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்துக்காக தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அதிரடியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் பார்த்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.