ரூ.200 கோடி வசூலை எட்டியது பிகில்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 

 

ரூ.200 கோடி வசூலை எட்டியது பிகில்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 

தீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

தீபாவளியையொட்டி வெளியான, பிகில் திரைப்படம், உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

பிகில் படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக #BigilHits200CRs என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Bigil

2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக பிகில் படம் தமிழகத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ளதாக சென்னை ரோஹினி திரையரங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல் கேரளாவில் பாக்ஸ் ஆபிஸை நிரப்பிய தமிழ் படவரிசையில் பிகில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் முதல் 5 நாட்களில் பிகில் படம் 7.82 கோடியும், கேரளாவில் 8.39 லட்சமும் வசூல் செய்துள்ளது.

Kerala Bigil

அமெரிக்காவில் மட்டும் பிகில் படம் ஒரு மில்லியன் டாலரை வசூலித்துள்ளது. மொத்தமாக பிகில் 200 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில், பிகில் திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மெர்சல், சர்காரை தொடர்ந்து தற்போது பிகிலும் 200 கோடி வசூலை எட்டியுள்ளது.