ரூ.200 கோடி ஊழல் வழக்கு ! ரூ.25 லட்சத்தில் கிடைத்த ஜாமின் !

 

ரூ.200 கோடி ஊழல் வழக்கு ! ரூ.25 லட்சத்தில் கிடைத்த ஜாமின் !

ரூ.200 கோடி அளவுக்கு சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக கைதான கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.

ரூ.200 கோடி அளவுக்கு சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக கைதான கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.

shivkumar

கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான டி.கே. சிவக்குமாரின் டெல்லி இல்லத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத ரூ.8.82 கோடி கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. மேலும் 3 முறை சட்டவிரோத பணபரிவர்த்தனை ரூ.200 கோடி அளவுக்கு செய்துள்ளதாக கூறிய அமலாக்கத்துறை 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் தன்மீதான குற்றச்சாட்டு பொய் எனவும் ஜாமின் வழங்குமாறும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார் டி.கே. சிவக்குமார். ஆனால் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 25 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமாரை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.