ரூ.119 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது வோடஃபோன்

 

ரூ.119 விலையில் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது வோடஃபோன்

வோடஃபோன் நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: வோடஃபோன் நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

வோடஃபோன் நிறுவனம் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டும் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.119 விலையில் புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தில் எஸ்.எம்.எஸ் சலுகை ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த புதிய வோடஃபோன் ரீசார்ஜ் பிளான் ரூ.169 பிளானை போன்றே கிட்டத்தட்ட உள்ளது. அதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகிய சலுகைகள் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது. அதோடு வோடஃபோன் பிளே ஆப் பயன்படுத்தும் வசதியும் அளிக்கப்படுகிறது.

மேலும் வோடஃபோன் ரீசார்ஜ் பிளான் போன்றே ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.119 விலையில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் இந்த ரீசார்ஜ் திட்டம் வழங்கப்படுவதாக தெரிகிறது.