ரீஎண்ட்ரிக்காக பித்தலாட்டம் பண்ணி வாய்ப்பு தேடும் மங்களகரமான நடிகை!

 

ரீஎண்ட்ரிக்காக பித்தலாட்டம் பண்ணி வாய்ப்பு தேடும் மங்களகரமான நடிகை!

பள்ளி பருவத்திலேயே நடிக்க வந்த மங்களகரமான நடிகை குறைந்த காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர்.

மங்களகரமான நடிகை பார்க்க குடும்ப குத்து விளக்கு போல் இருக்கே என பெரும்பாலான இயக்குநர்கள், கிராமிய படங்களின் நாயகியாகவே அவரை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், தன்னால் சிட்டி பொண்ணாகவும் நடிக்க முடியும் சில சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், பல முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்த கேரக்டரை ஒப்புக் கொண்டு ரேஸ்-மாஸ் நடிகருக்கு தங்கையாக நடித்து அசத்தினார். தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக உயர்ந்த நடிகை திடீரென படிப்பு தான் எனக்கு முக்கியம் போய் படிச்சு முடிச்சிட்டு திரும்ப வரேன் என நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனார்.

gossip

சிறு வயதாக இருந்தாலும் பெரிய நடிகர்களுக்கும் ஜோடி சேர ஏற்ற உடல் வாகை கொண்ட மங்களகரமான நடிகை தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக்கியுள்ளார். நடிகையின் சமீபத்திய புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஸ்லிம் ஆனாலும், பழைய புஸு புஸு இல்லையே என வருத்தத்தில் உள்ளனர்.

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏற்கனவே தான் நடித்த நடிகர்களிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்கிறாராம். அய்யோ பாவம் என்று பார்த்தால், மற்றொரு நடிகரிடம் சென்று தான் அந்த நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக பொய் சொல்லி இவரது படத்திலும் வாய்ப்பு கேட்கிறாம். சின்ன பொண்ணு என்று பார்த்தால், அதிமேதாவியாக பித்தாலாட்டம் செய்துக் கொண்டு கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகிறாராம்.