ரிலீசுக்கு தயாரானது திரிஷாவின் அடுத்த திரைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள் 

 

 ரிலீசுக்கு தயாரானது திரிஷாவின் அடுத்த திரைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள் 

நடிகை  திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ரிலீசுக்கு தயாரானது திரிஷாவின் அடுத்த திரைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள் 

சென்னை: நடிகை  திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திற்கு பிறகு அவர் காட்டில் ஒரே மழை என்றே சொல்லலாம். கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள திரிஷா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை படம் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. சுந்தர்.பி இயக்கியுள்ள அந்த படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் டீஸர், ட்ரைலர் குறித்த எந்த தகவலும் வெளியாகாமலிருந்த நிலையில் தற்போது நாளை இந்த படத்தின் டீஸர் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் செப்.6ம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.