ரிசார்ட்டில் ஜாம்பிகளிடம் சிக்கித் தவிக்கும் யோகி பாபு- யாஷிகா! 

 

ரிசார்ட்டில் ஜாம்பிகளிடம் சிக்கித் தவிக்கும் யோகி பாபு- யாஷிகா! 

யோகிபாபு- யாஷிகா இணைந்து நடித்துள்ள ஜாம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சென்னை: யோகிபாபு- யாஷிகா இணைந்து நடித்துள்ள ஜாம்பி படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை புவன் நல்லன் இயக்கியுள்ளார். ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவம் என்பதால் பெரிய பொருட்செலவு இல்லாமல் எளிதாகப் படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ‘பரிதாபங்கள்’ கோபி, சுதாகர், பிளாக் ஷீப் அன்பு ஆகியோர் நடித்துள்ளனர்.  

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று இந்த படத்தின்  ட்ரைலர் வெளியானது. சுமார் 2நிமிடம் உள்ள இதில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் பட்டாயா செல்கின்றனர். 

அங்கு உள்ள ரிசார்ட்டில் ஜாம்பியாக மாறும் மக்களிடம் இவர்கள் சிக்கிக்கொள்ள, அவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதே படத்தின் கதையாகும். கலகலப்பாக உள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.