ராமேஸ்வரம் கோயிலில் தொழில் அதிபர் அம்பானிக்காக ஆகம விதி மீறல்! இந்து முன்னணியினர் கண்டனம்

 

ராமேஸ்வரம் கோயிலில் தொழில் அதிபர் அம்பானிக்காக ஆகம விதி மீறல்! இந்து முன்னணியினர் கண்டனம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் தொழில் அதிபர் அம்பானிக்காக ஆகம விதிகளை மீறியதாக இந்து முன்னணியினர் குற்றசாட்டு.

அம்பானி மகளின் திருமண அழைப்பிதழை இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் வைத்து அம்பானி குடும்பத்தினர் நேரில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ambaani

அதனை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் முக்கிய திருக்கோயிலான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்வதற்காக மும்பையிலிருந்து இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முகேஷ் அம்பானி  நேற்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரையிலிருந்து மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு பகல் 1.15 மணியளவில் வந்தடைந்தார்.

அவருக்கு திருக்கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று நவ. 27 மதியம் 12:55 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்து விட்டு 1:50 மணிக்கு திரும்பினர். 

கோயிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மதியம் 3:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.ஆனால், நேற்று நவ. 27 ஆகமவிதிக்கு மாறாக நடை திறந்து வைத்ததாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர். 

rameswaram

இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் கூறுகையில், கோயிலை கட்டிய மன்னர் கூட ஆகம விதியை மீறாமல் தரிசனம் செய்ததாக வரலாறு உண்டு.

ஆனால் தொழிலதிபர் ஒருவரின் தரிசனத்திற்காக மதியம் 2:00 மணி வரை கோயில் நடை அடைக்கவில்லை.இது ஆகம விதிக்கு எதிரானது. அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.