ராமேஸ்வரத்தில் ஜொலிக்கும் தத்ருப ஜோதிர்லிங்கம்!

 

ராமேஸ்வரத்தில் ஜொலிக்கும் தத்ருப ஜோதிர்லிங்கம்!

12 ஜோதிர் லிங்கங்களை ராமேஸ்வரத்தில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டபத்தில்  தத்ரூபமாக அமைத்து பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்:

ஜோதிர் லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்பது பொருளாகும். இந்த லிங்கம் மற்ற லிங்கங்களை போல் இல்லாமல் ஒளி வடிவில் லிங்கத்தில் சிவபெருமான் அருளுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் 12 சிவன் கோயில்கள் இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளன.

jothirlingam

ஜோதிர் லிங்க வழிபாடு என்பது இந்துக்களால் சிவபெருமானை வழிபடும் விதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  இவ்வகை லிங்கங்களை மார்கழி  திருவாதிரை நாட்களிலும், ஆனி திருமஞ்சன நாட்களிலும் தரிசிப்பது சிறப்பு வாய்ந்தாகும்.

ஜோதிர் லிங்கங்களில் இரண்டு கடற்கரைகளிலும், மூன்று மலைகளிலும், நான்கு நதிக்கரைகளிலும், மூன்று ஊர் பகுதிகளிலும் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் உண்டியல் குடத்தெருவில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டபம் புதிய கட்டடத்தை ராமேஸ்வரம் கோயில் தக்கார் குமரன்சேதுபதி திறந்து வைத்தார்.

jothirlingangal

அப்பொழுது இம்மண்டபத்தில் ராமேஸ்வரம், கேதார்நாத், காசி, ஜார்கண்ட், மகராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸதலங்களின் சிவலிங்கங்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

மேலும் அதுமட்டுமின்றி சொர்க்கத்தில் லட்சுமி, நாராயணர், தேவதைகள் உள்ள தத்ரூப சிலைகளை வடிவமைத்தும், 3டி திரையில் தியானம் விளக்க படமும் அமைத்துள்ளனர்.

jothirlingam

இதனை பொதுமக்கள், பக்தர்கள் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் இலவசமாக கண்டு தரிசிக்கலாம் என்று பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்விழாவில் பிரம்மாகுமாரிகள் தியான மண்டப நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர் .