ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்…

 

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்…

ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு முடிந்தது என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் மொராபாத் நகருக்கு 4 நாள் பயணமாக ஆா்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றுள்ளார். அவரது சுற்றுப்பயணத்தின் முதல் நாளான கடந்த வியாழக்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களை சந்தித்தார். அப்போது கேள்வி பதில் நிகழ்வின்போது தொண்டர்களின் கேள்விக்கு மோகன் பகவத் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ஆர்.எஸ்.எஸ்.

ராமர் கோயில் கட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மக்களின் கருத்தை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்து விடுகிறது. தற்போது கோயில் கட்டுவது அரசாங்கத்திடமும், அறங்காவலர் குழுவிடமும் உள்ளது. கோயில் கட்டுமான தொடங்கும் வரை விஷ்வ இந்து பரிஷித்தின் பங்களிப்பு இருக்கும்.

ராமர் கோயில்  விவகாரம்

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு உண்டு. இது மக்களின் நலனுக்கானது ஆகையால் அமைப்பு இந்த விவகாரத்தில் ஒரு போதும் பின்வாங்காது. குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் உணர தொண்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.