ராமராஜனின் படத்தை காப்பியடித்த மணிரத்னம்!

 

ராமராஜனின் படத்தை காப்பியடித்த மணிரத்னம்!

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த வானம் கொட்டட்டும் படம் ராமராஜன் நடிப்பில் வெளியான தங்கமான ராசா படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதக சர்ச்சை எழுந்துள்ளது. 

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த வானம் கொட்டட்டும் படம் ராமராஜன் நடிப்பில் வெளியான தங்கமான ராசா படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்  தயாரித்த திரைப்படம் வானம் கொட்டட்டும். புதுமுக இயக்குநர் தனா  இயக்கத்தில் உருவான இந்த படத்தில்  விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்தா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

maniratnam

இந்நிலையில் இந்த படம் 1989 ஆம் ஆண்டு ராமராஜன்- கனகா நடிப்பில் இயக்குநர் வி.அழகப்பன் இயக்கிய தங்கமான ராசா படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போன தந்தையை பல ஆண்டுகள் கழித்து ஜெயிலில் இருந்து வந்த பின்னரும் பழிக்குப்பழி வாங்க துடிக்கும் கிராமத்து பங்காளிகளின் பகைமை உணர்ச்சி தான் படத்தின் மூலக்கதை. இதே கதை நகரத்தின் பின்னணியில்தான் வானம் கொட்டட்டும் படமும் பயணிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.