ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்- போக்குவரத்து துறை எச்சரிக்கை!

ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்- போக்குவரத்து துறை எச்சரிக்கை!

பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 

பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஓலா, ஊபர் போன்ற வாடகை கார், ஆட்டோ செயலிகளைப் போல ‘ராபிடோ’ எனும் செயலி மூலம், இருசக்கர வாகனங்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, அழைத்துச் செல்லும் முறை சென்னையில் நடைமுறையிலுள்ளது. உரிய அனுமதி பெறாமல் இந்த ‘Bike Taxi’ முறை செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனி நபர் செல்லும் இருசக்கர வாகனத்தில், வாடிக்கையாளரை ஏற்றுவது சட்டத்திற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கும் புறம்பானது. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்துதுறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை ராபிடோ ஆப் மூலம் பயணம் செய்த 37 வாகனங்களை போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.