ராபர்ட் வதேராவிடம் விசாரணை ஏன்? : மம்தா விளக்கம்

 

ராபர்ட் வதேராவிடம் விசாரணை ஏன்? : மம்தா விளக்கம்

கொல்கத்தா: ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள காரணம் என்ன என்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை சிபிஐ விசாரிக்கும் விவகாரத்தில் தர்ணா போராட்டம் நடத்தி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார் மம்தா. தற்போது பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்காகவே இதுபோல் சதி நடக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்பதை தடுக்க முடியாது என கூறியிருக்கிறார்.