ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

 

ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். சுமார் 2 மணி நேரம் வீரர்களுடன் தனது நேரத்தை மோடி செலவிட்டார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அது போல் இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

மோடி

ஜம்முவின் எல்லை பகுதியான ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் சென்றார். ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கியும், ஊட்டியும் விட்டார். மேலும் ஆயிரம் ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இதுவரை சாத்தியமற்றது என்ற நினைத்ததை (சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்) இந்திய வீரர்களின் வீரத்தால் சாத்தியமாகி உள்ளது என வீரர்களை பாராட்டி பேசினார்.

ராணுவ வீரர்களுடன் மோடி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி முதல் முறையாக அங்கு சென்றார். மேலும், இந்திய பிரதமர் மோடி ரஜோரி பகுதிக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் ராணுவம் அந்த பகுதியில் இந்திய  நிலைகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தி இருந்தது.