‘ராட்சசன்’ படம் பார்த்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திமுக தலைவர் பாராட்டு!

 

‘ராட்சசன்’ படம் பார்த்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திமுக தலைவர் பாராட்டு!

விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

சென்னை: விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் படமான ‘ராட்சசன்’ விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிரத்யேகமாக திரையிடப்பட்ட ’ராட்சசன்’ படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராட்சசன் பட நாயகன் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க மகிழ்ச்சி. திமுக தலைவர் தங்களுக்காக நேரம் ஒதுக்கி, படத்தை பார்த்து எனது நடிப்பை பாராட்டினார். உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி’ என ட்வீட்டியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.