ராஜீவ்காந்தி கொலை வழக்கு : இளநீர் பருகி உண்ணாவிரதத்தை முடித்த நளினி…!

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : இளநீர் பருகி உண்ணாவிரதத்தை முடித்த நளினி…!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 28 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி கடந்த 25 ஆம் தேதி முதல் வேலூர் பெண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினியின் கணவன் முருகனும் கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். 

Nalini

போராட்டத்தைக் கைவிடும் படி சிறைத் துறை அதிகாரிகள் பல முறை அறிவுறுத்தியும் நளினியும் முருகனும் போராட்டத்தைக் கைவிடவில்லை. கடந்த 4 நாட்களாக நளினிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று சிறை அதிகாரி அல்லி ராணி நளினியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில், இருவரின் கோரிக்கையையும் விரைவில் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகச் சிறை அதிகாரி உறுதி அளித்ததால் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட ஒப்புக் கொண்டார். அதன் பின், அதிகாரி கொடுத்த இளநீரைப் பருகி 11 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். 

Nalini

நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டது குறித்து முருகனுக்குத் தகவல் அளித்தும் முருகன் உண்ணாமல் போராட்டத்தை நீடித்து வருகிறார். முருகனுக்கும் கடந்த சில நாட்களாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. முருகனின் உடல்நிலை மோசமாகி வருவதால், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் படி சிறை அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.