ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..!

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..!

சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. 

Rajiv gandhi murder case

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறப்பட்டததால் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ராஜீவ்காந்தியின் கொலையில் தான் வாங்கிக் கொடுத்த பேட்டரி தான் வெடிகுண்டிலிருந்தது என்று நிரூபிக்கப் படாததால் தனக்கு அளித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். 

Supreme court

ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கை விசாரிக்காமல் அலைக்கழித்துக் கொண்டே வந்த உச்சநீதிமன்றம்,  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் அளித்த மனுவை ஏற்று, இந்த மனு வரும் நவம்பர் 5 ஆம் தேதி கண்டிப்பாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.