ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

 

ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இலங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்: போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இலங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவிற்கு வழங்கி வந்த ஆதரவைக் கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றது. அதனையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து அப்புறப்படுத்தி இலங்கையில் ஒரு அரசியல் சாசன பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும். போர்குற்றவாளியான ராஜபக்சேவை  பிரதமர் பதவியிலிருந்து நீக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.