ராகுல் காந்தி உரையை மொழி பெயர்த்து அசத்திய பள்ளி மாணவி !

ராகுல் காந்தி உரையை மொழி பெயர்த்து அசத்திய பள்ளி மாணவி !

ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைக்க வந்தார். வயாநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் குருவன் குண்டு அரசு மேல்நிலை பள்ளியில் 4000 மாணவர்கள் பயில்கின்றனர். திரண்டிருந்த கூட்டத்தின் முன்னால் பேச எழுந்த ராகுல் கூட்டத்தில் இருந்த மாணவர்களைப் பார்த்து யாராவது என் பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்க்க வருகிறீர்களா என்று கேட்க,அதுவரை மேடைப்பேச்சை மொழி பெயர்த்த அனுபவமே இல்லாத +2 மாணவியான சஃபா ஃபேபின் மாணவர்களின் பலத்த கைதட்டலுக்கிடையே மேடை ஏறி சரளமாக மொழி பெயர்த்தார்.

rahul gandhi

நம் நாட்டில் சிலர் வெறுப்பை வளர்த்துக்கொண்டே அறிவியல்.முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள்.வெறுப்பும் அரசியலும் இணையவே முடியாது.நீங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருங்கள், மற்றவர்களின் சிந்தனையை, கலாச்சாரத்தை, மொழியை மதியுங்கள்.உங்களுக்கு மாறுபட்ட கருத்தை ஒருவர்.சொன்னால் அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று சிந்தியுங்கள்.ஒரு குழந்தையின் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தொலைத்து விடாதீர்கள் என்று ராகுல் பேசப்பேச சரளமாக மொழி பெயர்த்தார் சஃபா.

இடையிடையே மலையாளத்தில் புழங்கும் ஆங்கில வார்த்தைகளையும் கலந்து அவர் மொழி பெயர்த்ததை மேடையில் இருந்த கட்சித் தலைவர்களும் ஆமோதித்தனர்.ஒரே ஒரு முறை ‘ வன்மம்’ என்பதற்கு இணையான மலையாளச் சொல்லுக்கு சஃபா தடுமாறிய போதுமட்டும் பின்னால் இருந்த ஒரு தலைவர் எடுத்துக் கொடுக்க நேரிட்டது.சக மாணவர்களின் பலத்த கைதட்டலோடு ,சஃபாவுக்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தார் ராகுல்.

உள்ளூர் மதரஸாவில் ஆசிரியராக இருக்கும் குஞ்ஞி முகமதுவின் மகளான சஃபாவை இப்போது மலையாளிகள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சிறுநீர் பாசனம் புகழ் எச்.ராஜாக்களும்,ராகுல் ஒன்று சொன்னால் தான் ஒன்று பேசும் தங்கபாலுக்களும் உள்ள நாட்டில் இப்படி பட்ட இளைஞர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களே.